க்ரைம்

12 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளைஞர் கைது : போலீசார் அதிரடி

ராஜபாளையத்தில் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்து 12 கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பேருந்தில் ஒருவர் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வடக்கு காவல் நிலைய போலீசார், ராஜபாளையம் டி.பி மில்ஸ் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தில் இருந்து மூட்டையுடன் இறங்கிய செவல்பட்டி தெருவை சேர்ந்த சர்க்கரைராஜ் என்பவரிடம் சோதனை மேற்கொண்ட போலீசார், மூட்டையில் கஞ்சா பொட்டலங்களை வைத்து கடத்தி வந்தது தெரிய வந்த நிலையில், சர்க்கரைராஜை கைது செய்து, 12 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button