க்ரைம்
Trending

கொட்டி எரிக்கப்படும் கோழி கழிவுகள் – பாதிக்கப்படும் நீர்நிலை

பழனி ஆயக்குடி பேரூராட்சிக்கு எதிரே உள்ள குளத்தில் அப்பகுதியில் இருக்கும் வியாபாரிகள் கோழி கழிவுகளை குளத்தில் கொட்டி எரித்து வருகின்றனர்.

கோழி கழிவுகள் காய்ந்த பின் தீ வைத்து எரிப்பதால் அதிலிருந்து வரும் புகை வாகன ஓட்டிகளில் மூச்சுத் திணறுகளுக்கு காரணமாக அமைந்து வருகிறது. தொடர்ந்து அதிகப்படியான கரும்புகைகள் வருவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

குளத்தில் கொட்டி எரிக்கப்படுவதால் குளத்த்து நீரில் கோழிக்கழிவுகள் கலந்து நீர் மாசுபடுவதுடன் துர்நாற்றம் வீசி வருகிறது

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் கோழி கழிவை கொட்டும் வியாபாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button