
சென்னை திருவொற்றியூர் பகுதியில் அரசு ஜெயகோபால் கரோடியா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்ற நிலையில், அந்த பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவர்கள் கஞ்சா அடிப்பதை அப்பள்ளியில் பயிலும் தனுஷ் என்னும் மாணவர் கஞ்சா புகைத்ததை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஒரு இளைஞர் மற்றும் 11 சிறார்கள் என மொத்தம் 12 பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அதே பள்ளியில் படித்தவர்கள் என்றும், விசாரணை முடிவில் கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பதும் குறித்தும் தெரிய வரும் என போலீசார் உறுதியளித்தனர்.