
தென் தமிழகத்தில் மதுரை பேருந்து நிலையாட்ர்ஹத்திற்கு அடுத்தபடியான முக்கிய பெருத்து முனையமாக திண்டுக்கல் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தென் தமிழக மக்கள் கோயம்புத்தூர் ஈரோடு சேலம் திருப்பூர் உட்பட மேற்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களுக்கு செல்ல திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்து செல்லவேண்டும் தினந்தோறும் பல நூறு பேருந்துகளும் பல ஆயிரம் பயணிகளும் இந்த பேரூந்துநிலையம் வந்து செல்கின்றனர்.
அவ்வளவு முக்கிய பேருந்து முனையம் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது. தினமும் நத்தம் பேருந்து நிறுத்த பகுதிக்கு அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடத்தில் இருந்து நீர் சாலைகளில் தேங்கி நிற்கின்றது.
வாகனங்கள் கடக்கும்போது அருகில் நடந்து செல்வோர் மீது இந்த கழிவுநீர் தெறிக்கிறது தினந்தோறும் நடக்கும் இந்த அவலத்தை சீர் செய்ய கட்டண கழிப்பிட ஒப்பந்ததாரரோ மாநகராட்சி நிர்வாகமோ நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதில்லை .
ஆங்காங்கே சிறுநீர் கழித்து சுகாதார சீர்கேட்டில் சிக்கித்தவிக்கும் திண்டுக்கல் பேருந்து நிலையம் இலவச கழிப்பிடங்கள் தூய்மையின்மை சாலைகளில் கழிவுநீர், சாக்கடை கால்வாய்களில் குப்பைகள் மற்றும் துர்நாற்றம் என தூய்மை என்பது என்ன விலை என கேட்கும் நிலையில் தான் திண்டுக்கல் பேருந்து நிலையம் இருக்கிறது என பேருந்துநிலையம் வரும் பயணிகள் புலம்பி வருகின்றனர்.
சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் திண்டுக்கல் பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிக்க தேவையான நிரந்தர நடவடிக்கைகள் வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

