சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர். இவர் கடந்த சில நாட்களாக தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவரது நண்பர் ஜெய் தனக்கு அறிமுகமான இளம் பெண்ணை அலெக்ஸாண்டரின் அறைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, அந்த இளம் பெண்ணிடம் அலெக்ஸாண்டர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த பெண் தனது தோழிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தோழியும், இளம் பெண்ணும் விடுதிக்கு வந்து அலெக்ஸாண்டரிடம் இது தொடர்பாக கேட்டுள்ளனர். அப்போது, அலெக்ஸாண்டர் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த இளம் பெண் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் திரைப்பட விநியோகஸ்தர் அலெக்ஸாண்டரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
