திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் நேற்று இரவு ( 03.09.2026 ) உள்ளே நுழைய முற்பட்ட நபர் மது போதையில் இருந்ததனை கண்டுபிடித்த பாதுகாப்பு பணியாளர்கள் வெளியே செல்ல வலியுறுத்தி அந்த மதுபோதை நபரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இதனால் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதை ஆசாமி பொறுமையா சொல்லு இல்லேனா என்னய வேணா அடி என பாதுகாப்பு பணியாளர்களை பணி செய்யவிடாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டே இருந்த நிலையில் வலுக்கட்டாயமாக பாதுகாப்பு பணியாளர்கள் வெளியேற்றினர்.
சமீப நாட்களாக தொடர்ந்து அடிகோரு முறை அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS அவர்கள் பொதுமக்களின் நலன் கருதி இரவு நேர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளுக்கு காவலர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

