
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் இன்று (திங்கட்கிழமை) தனது மொபட்டில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக பின்புற சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக வாகனத்தின் எஞ்சின் பகுதியிலிருந்து திடீரென புகை கிளம்பியது. இவர் புகை வருவதைக் கண்டு உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சில நொடிகளில் பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பிடித்து, மளமளவென மொபட் முழுவதும் தீ பரவியது. இதனை தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மொபட் முற்றிலும் எரிந்து சேதமடைந்த நிலையில், பாண்டியன் சமயோசிதமாக செயல்பட்டதால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

