ரொம்ப சோதிக்கீங்கடா 90கிட்ஸ!! வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!!
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர் ஒருவர் சக மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக – கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பளுகல் பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. ஊரடங்கு தளர்வுகளை அடுத்து இந்தப் பள்ளியில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடன் அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு நண்பர்கள் வற்புறுத்தலின் பேரில் வகுப்பறையில் வைத்து தாலி கட்டியுள்ளார்.
மாணவன் மாணவிக்கு தாலி கட்டும் போது சக மாணவர்கள் காகிதங்களை கிழித்து அவர்கள் மீது மலர்கள் போல தூவி வாழ்த்தியும் உள்ளனர். இதை உடன் இருந்த மாணவர் ஒருவர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெற்றோர்களிடையே பரபரப்பை வருகிறது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கன்னியாகுமரி #90கிட்ஸ் #2Kகிட்ஸ் #பள்ளிமாணவர்கள் #குழந்தைதிருமணம் #90Kids #2k_kids #SchoolStudents #Child_Marriage