என்னடா கவர்மெண்ட்!! செத்தா தான் வருவீங்களா!!! மகளை இழந்த தாயின் கதறல்!!!
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 5 நாட்களாக சென்னையில் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னையே வெள்ளத்தில் மிதந்துக்கொண்டுள்ளது.
கடந்த 5 நாட்களாகியும் சென்னையின் 500க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழை நீர் வடியாமல் இருப்பதாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்களும். தன்னார்வலர்களும் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வரும் கடந்த 4 நாட்களாக சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை திருவொற்றியூர், கலைஞர் நகரில் 11 வயது சிறுமி மழை நீரில் நடந்து சென்ற போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது.
இந்த காணொளிகள் அந்த உயிரிழந்த சிறுமியின் தாய், தனது நெஞ்சில் அடித்துக் கொண்டு பேசியதாவது,
“ஒரு நாயும் இங்கு வரவில்லை., என் பொண்ணை கொன்று விட்டார்கள். ஒருத்தன் கூட வரவில்லை. எவனுமே என் மகளின் அருகில் செல்லவில்லை., என் பொண்ணை பார்ப்பதற்கு எவனுமே வரவில்லை. என் மகள் தண்ணீரிலேயே கிடந்தாள்.
என் மகள் என்ன நினைத்து தன் உயிரை விட்டாலோ., ஐயோ., யாருமே வரவில்லை., என்னடா கவர்மெண்டு., செத்ததுக்கு அப்புறம் வருவதுதான் கவர்மெண்டா., உயிர் இருக்கும் போது வராத கவர்மெண்டு (தமிழக அரசாங்கம்) இறந்த பெண் எதற்கு வருகிறார்கள். என் பொண்ணு எனக்கு வேணும்., என் பெண்ணை என்னிடம் கொடுங்கடா.,” என்று அந்த காணொளியில் இறந்த சிறுமியின் தாய் தனது நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும் இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சென்னை #தமிழ்நாடு #தமிழகஅரசு #சென்னை_மாநகராட்சி #சென்னை_மழை #சென்னை_வெள்ளம் #சிறுமி_பலி #TamilNadu #TamilNaduGovernment #Chennai #Chennai_Corporation #ChennaiRains #ChennaiFloods