கமல் எப்படி பிக்பாஸிற்கு செல்லலாம்?? சுகாதாரத்துறை செயலர்….
நடிகரும், மநீம தலைவருமான கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.
கடந்த நவம்பர் 24 ம் தேதி தான் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டார். கடந்த சனிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் வீட்டில் ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்து நேரடியாக அவர் பிக்பாஸ் செட்டிற்கு சென்று அங்கு சூட்டிங்கில் பங்கேற்றார். கொரோனா தொற்றிலிருந்து மீண்டாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்கிற விதி இருப்பதால், அந்த விதியை கமல் மீறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கொரோனா விதிகளின் படி சிகிச்சை பெற்றவர்கள் தங்களை தனிமைப்படுத்த வேண்டும். சிகிச்சையிலிருந்து கமல் நேரடியாக சூட்டிங்கில் பங்கேற்றதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார். இதன்மூலம் கொரோனா விதிமுறையை கமல் மீறியிருப்பதாக தெரிகிறது.