கடலூர் மாவட்டம் சிதம்பரம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னகுமட்டி கிராமத்தை சேர்ந்த அசோகன் மகள் தீபா நர்சிங் படிப்பு முடித்துள்ள இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி தீபா உயிரிழந்தார். இது குறித்து அசோகன் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீபா உயிரிழந்ததில் வேறு ஏதேனும் காரணம் இருக்கின்றதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.