
ஸ்மார்ட் மீட்டரில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை ; மின்சாரத்துறைக்கு பணியாளர்களை எடுப்பது கண்டிப்பாக டிஎன்பிஎஸ்சி வழியாகத்தான் தேர்வுகள் நடக்கும்..
மின்சாரத்துறை சார்பாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டது போல விசாரணை நடைபெற்று வருகிறது முறைகேடு உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ..
மின்வெட்டு தொடர்பாக அதிகமான ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து பிரச்சனையை சரி செய்து வருகிறோம் விரைவில் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மேம்படுத்தினால் தான் நிரந்தர தீர்வு கொடுக்க முடியும் அதற்கு சில காலங்கள் எடுக்கும் ..
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் தொடரமைப்பு கழக கட்டிடத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் முன்னிலையில் தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது.. இந்த நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குனர் காமகோடி கலந்து கொண்டார்..
ஐஐடி இயக்குனர் காமகோடி
தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தியும் சூரிய உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது . அதனை சேமிப்பதற்கு வழிமுறைகளை அரசுக்கு இந்த ஒப்பந்தம் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகை செய்கிறோம்.
ஹைட்ரஜன் பயோகேஸ் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது , அதில் எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் , இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாங்கள் தமிழக அரசுடன் கையெழுத்து இடுகிறோம்.
மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் மேடைப்பேச்சு
மின்சார வாரியத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உன்னிப்பாக நகர்த்தி வருகிறோம் நமக்கு முக்கியமான காலகட்டம் நமக்கு தேவையான ஒன்று ..
நமக்கு மிகப்பெரிய செயல்பாடுகள் நடக்கின்ற மின்சார வாரியத்தில் எல்லா சேவையும் கொடுத்து வருகிறோம்..
உலகத்தரம் வாய்ந்த ஒரு செயல்பாடு பாலிசி வேண்டும் புதிய டெக்னாலஜி செயல்படுத்துவதற்கு ஒரு குழு வேண்டும் அதற்காக முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் இது
ஒவ்வொரு இடத்திலும் வென்டர்ஸ் வேலை செய்கிறார்கள் ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு அனுபவமுள்ள நபர்கள் கொண்ட ஒரு குழு வேண்டும்..
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார்
தமிழ்நாட்டில் பல இடங்களில் தொடர் மின்வெட்டு இருப்பது தொடர்பான கேள்விக்கு?
இது சம்பந்தமாக ஏற்கனவே சொல்லி இருக்கிறோம் எதனால் மின் தட்டுப்பாடு வருகிறது என்று சொல்லி இருக்கிறோம் அங்கங்க இருக்கக்கூடிய குறைபாடுகளை வைத்து நிவர்த்தி செய்து வருகிறோம் ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு இருக்கிறது டிரான்ஸ்பார்ம் பிரச்சனையா அல்லது வேறு என்ன பிரச்சனை என்பது குறித்து ஆராய்ந்து சரி செய்வதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம் பாலவாக்கத்தில் கொஞ்சம் நீண்ட நேரம் ஆனது அதன் பிறகு அதை சரி செய்து முடித்தார்கள்..
மேன்வேலாக அதிகமான ஒப்பந்த தொழிலாளர்களை எடுத்து பிரச்சினையை சரி செய்து வருகிறோம் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் எடுத்து பிரச்சினையை சரி செய்து வருகிறோம். விரைவில் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மேம்படுத்தினால் தான் நிரந்தர தீர்வு கொடுக்கும் முடியும் அதற்கு சில காலங்கள் எடுக்கும்..
நமக்கு நல்ல செயல்முறை மற்றும் கொள்கைகள் வேண்டும் அது இல்லாமல் புது தொழில்நுட்பங்கள் நிறைய இருக்கிறது சர்வதேச அளவில் மானிட்டர் செய்ய வேண்டுமா? புது டெக்னாலஜி வருகிறது புது மீட்டர் வருகிறது வேறு ஏதாவது டெக்னாலஜி வருகிறதா சோலாரில் புது டெக்னாலஜி இதெல்லாம் கையாள்வதற்கு நல்ல ஒரு டெக்னாலஜி குழு வேண்டும் அது இங்கிருக்கின்ற மின்சாரத் துறையின் சீனியர் பொறியாளர்களும் ஐஐடி சேர்ந்து வேலை செய்வார்கள் இதில் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது உடனடியாக தீர்வு வேண்டும் என்று ஏற்கனவே ஐஐடி குழுவுடன் ஆலோசனை செய்திருக்கிறோம் அதெல்லாம் சேர்த்து வைத்து அதற்கான தீர்வை வரும் காலங்களில் கொடுப்பார்கள்..
எது எதெல்லாம் உடனடியாக தேவையோ உடனடியாக அதை குறிப்பிடுவோம் அது இல்லாமல் மற்றவை டெக்னாலஜி வகையில் ஆராய்வோம் நிறைய டெக்னாலஜி உள்ளிருக்கிறது அந்த டெக்னாலஜியை கொண்டு வருவோம்..
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலையை இன்றைக்கே தொடங்கி இருக்கிறோம் ..
இது ஒரு வேலை கிடையாது பல வேலை இருக்கும் அதற்கு தனித்தனியே நிபுணர்கள் இருப்பார்கள்.. நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக இன்று வெளியிடுவோம்..
இதற்கு நாம் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் செயல்முறை மற்றும் கொள்கைதான் அது இல்லாமல் புது டெக்னாலஜி இருந்தால் மானிட்டியரிங் செய்வதற்கு நல்ல டெக்னாலஜி வேண்டும்
இந்த புரிந்துணர் ஒப்பந்தம் நிறுவனத்திற்கு உதவியாக இருந்தாலே அனைவருக்கும் உதவியாக இருக்கும் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக தான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறுவனம் மேம்படுத்தினாலே பொதுமக்களுக்கான லாபமாக இருக்கும்..
ஸ்மார்ட் மீட்டரில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை டெக்னாலஜி வகையில் நாம் அதில் உறுதியாக இல்லை..
இந்த வருடம் 15 ஆயிரம் நபர்களை வேலைக்கு எடுக்கிறோம் ஐந்தாயிரம் பழைய கேங்மேன் வேலைக்கு எடுக்கிறோம் ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குள் விரைவாக முடிக்கின்ற பணியில் இருக்கிறோம் அதுவரை ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து சரி செய்து வருகிறோம்..
மின்சாரத் துறைக்கு பணியாளர்களை எடுப்பது கண்டிப்பாக தேர்வுகள் டிஎன்பிசி வழியாக தான் நடக்கும்
வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டது போல முறைகேடு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் விசாரணை நடைபெற்று வருகிறது உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..