க்ரைம்
Trending

கேரள மாடல் போல் மாநிலத்தில் நேர் எதிராக இருந்தாலும் பா.ஜ.க.வை எதிர்ப்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

திமுகவும் தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலை நோக்கு பார்வை

மாணிக்கம் தாகூர் பேட்டி

சென்னை விமான நிலையத்துல் தமிழக காங்ஜிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களுக்கு செல்கிறோம். நீட் தேர்வினால் 5 மாணவிகள் உயிரிழந்து உள்ளனர். இந்த கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மத்திய மந்திரி பிரதான் அர்த்தமில்லாத விளக்கங்களை தந்து கொண்டு இருக்கிறார். நீட் காரணமாக தமிழகத்தில் 37 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. நீட் தேர்வு ப்யிற்சி மையங்களில் ரூ.5 ஆயிரம் கோடி தொழில் நடந்து உள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பேப்பர் லீக் ஆவதால் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகிறது. இந்தியா முழுவதும் நேர்மையான தேர்வு முறை வேண்டும் என ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்க்ளுக்கு ஆறுதல் சொல்ல செல்கிறோம்.

பா.ஜ.க.வை எதிர்க்க ஒரே அணியில் திமுகவும் தவெகவும் வர வேண்டும் என்ற திருமாவளவனின் பார்வை தொலை நோக்கு பார்வையாகும். சட்டமன்றத்தில் உள்ள எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்து பார்க்க கூடாது. தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டும். கேரளாவில் கம்யூனிஸ்ட்டும் காம்க்கிர்சும் நேர் எதிராக இருக்கிறோமா ஆனால் பா.ஜ்.க. எதிர்ப்பில் ஒற்றுமையாக இருக்கிறோம். அதுபொன்ற நிலை தமிழ்நாட்டில் உருவாக வேண்டும். இரு கட்சிகளும் தயாராக வேண்டும். கேரள மாடல் மாதிரியாக இருக்க வேண்டும். தமிழகம் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அதிகாரம் இல்லாத மாநிலமாக கொண்டு வர திருமாவளவன் நினைக்கிறார்.

கரூரில் முதலமைச்சர் தனக்கு மிகுந்த வலியான சம்பவம் என்று கூறி உள்ளார். அது விஜய் ஸ்டைல்.

கர்நாடக மாநில அரசியல்வாதிகள் ஒன்றாக இருக்கிறார்கள். அது போல் தமிழகத்திலும் எல்லா அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் என்ன தீர்மானம் போட்டமோ அந்த நிலையில் இருந்து மாற கூடாது.

விவசாயிகள் பாதுகாப்பு குறித்து எல்லாரும் உட்கார்ந்து பேச வேண்டும்.

திமுக ஆதரவு கோர அரசு நடந்தவில்லை. மசோதா கொண்டு வரும் எந்த கட்சி என்ன நிலை எடுக்கிறது என்பது தான். இவ்வாறு அவர் கூறினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button