க்ரைம்
Trending

பொதுமக்களின் வெகுநாள் கோரிக்கையை வந்து சில நாட்களில் நிறைவேற்றிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் ஒரே டூரிஸ்ட் பகுதியாக சிறுமலை மலை பகுதி இருந்து வருகிறது. சிறுமலை மலைப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட உள்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி முழுவதும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ளது.

பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புறகாவல் நிலையம் சிறுமலை பழையூர் பகுதியில் அமைத்து செயல்பாட்டிற்கு கொண்டுவந்த நிலையில் காவலர் பற்றாக்குறையால் தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் போனது.பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து இந்த புறக்காவல் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்து வந்த நிலையிலும் செயல்படாமலேயே இருந்து வந்தது .

இந்த நிலையில் தற்போது புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற திரு ஜெயக்குமார் IPS அவர்கள் தொடர்ந்து பல்வேறு ஆய்வுப்பணிகளை மாவட்டம் முழுவதிலும் மேற்கொண்டு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சிறுமலை மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறக்காவல் நிலையத்தை புதுப்பித்து இன்று திறந்து வைத்து சிறுமலை வாழ் பொதுமக்களுக்கு தேவையான காவல்துறை உதவியினை இந்த புறக்காவல் நிலையத்திலேயே பெறலாம் என்றும் பொதுமக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் தெரியவரும் சட்டவிரோதச்செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்களை இந்த புறகாவல் நிலையத்திலேயே தெரிவிக்கலாம் என்றும் கூறினார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button