லயோலா மணி செய்தியாளர்கள் சந்திப்பு..
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய ஆசியோடு இன்று என்னுடைய பதிவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
மிக சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ,பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை சார்ந்த என்னை போன்ற ஒரு சாமானிய மனிதருக்கு மிக உயரிய பதவி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனப்பூர்வமான நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடுமையாக உண்மையாக உழைத்தால்,மக்களை நேசித்தால் அவர்களுக்கான அங்கீகாரம் சரியான நேரத்தில் சரியான முறையில் கிடைக்கும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அறிவிப்பின் வாயிலாக தெரிவித்திருக்கிறார்.
இந்த நேரத்தில் அமைச்சர் ஆனந்த், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோருக்கு மணப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறுப்பான பதவியை கொடுத்திருக்கிறார்கள் பொறுப்பை உணர்ந்து பொறுப்போடு செயல்படுவேன் என்று கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய பணி சிறப்பாக இருக்கும் சொல் வடிவத்தை விட செயல் வடிவத்தில் நன்றாக இருக்கும்.

