செய்திகள்

நிர்வாணமாக ஓடிய இளம்பெண் தற்கொலை

ஆந்திர மாநிலத்தில் அம்மன் சிலையுடன் நிர்வாணமாக ஓடிச் சென்ற இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி என்ற பெண் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், பணிச்சுமை காரணமாக 6 மாதங்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்த தேஜஸ்வினி சம்பவத்தன்று அதிகாலையில், தனது தாயாரை வீட்டில் பூட்டி வைத்து விட்டு வெளியேறினார். பின்னர் தனது உடைகளை களைந்து தெருக்களில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த தேஜஸ்வினி, அருகே இருந்த கோயிலுக்குள் நுழைந்து அங்கிருந்த அம்மன் சிலையை எடுத்துக் கொண்டு கோயில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், உயிரிழந்த தேஜஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பின்னர், அம்மன் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தேஜஸ்வினியின் தாய், தனது மகள் பயங்கர கனவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் மனநல சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button