
சென்னை விமான நிலையத்தில் டெல்லி செல்வதற்காக வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் கடன் தொல்லையில் இருப்பதால் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், சூப்பர் ஹெலினோ தாக்கத்தின் காரணமாக தண்ணீர் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை விவசாயிகள் தினமும் சந்திக்கின்றார்கள். இந்த பிரச்சனையின் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனை போக்க வேண்டும் என்றால் விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், பூரண மதுவிலக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தஞ்சாவூரில் பெண்களை அவதூறாக பேசிய வார்த்தைக்கு, அன்புமணி ராமதாஸ் பெண்கள் குறித்து இழிவாக பேசுகின்ற ஆண்களுக்கு ஆண்மையும், தன்னம்பிக்கையும் கிடையாது என்று கூறியிள்ளார்.

