
பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா மீது நம்பகத்தன்மை வலுவடைந்திருப்பதாக, பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட, பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதன்மூலம் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத்தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கும் சட்டத்திருத்தம் நிறைவேறியுள்ளது. மேலும், இந்த பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் ஒப்புதல் அளித்ததும், நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதால், அரசு பொதுத்தேர்வுகள் மீதான நம்பகத்தன்மை வலுவடைந்திருப்பதாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள காணொலி பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.



