
குடியிருப்பு பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசூர் பிருந்தாவன் நகர் குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் கடந்த 28 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள், சிசிடிவி கேமராவின் மீது துணியை பொருத்தி வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ஓசூர் அட்கோ காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்து திருட்டு சம்பவம் காரணமாக அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓசூர் பகுதியில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் இது போன்று மர்ம நபர்கள் நள்ளிரவு நேரங்களில் நுழைந்து பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது என குற்றம் சாட்டுகின்றனர். இதனை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி தடுக்க வேண்டும் என ஓசூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
