செய்திகள்

கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த 3 பள்ளி மாணவர்கள் மீட்பு

டெல்லியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 3 மாணவர்கள் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கழிவுநீர்க் கால்வாய்களும் நிரம்பி வழிந்ததால் சாலை எது,? கழிவுநீர்க் கால்வாய் எது என்று அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஜகத்பூர் என்ற இடத்தில், நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவர்களில் 3 பேர், கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்து விட்டனர். அப்போது, அருகே இருந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், அவர்களை பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button