
அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சின்னா மனைவி தேவகி இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சின்னா வேலைக்குச் சென்ற பிறகு தினந்தோறும் இன்ஸ்டாகிராமில் தேவகி பல ஆண் நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். அதனை அறிந்த சின்னா பலமுறை தனது மனைவியை கண்டித்த போது கணவன் மனைவிக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தேவகி தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி வந்துள்ளார். பின்பு சின்னா மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து சுமார் 2 மணி நேரம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி நீ தான் நன்றாக ஆட்டோ ஓட்டுவாயே நீ ஆட்டோ ஓட்டு நான் பின்னால் அமர்ந்து கொள்கிறேன் என்று கூறி ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு சென்ற போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தேவியின் கழுத்தை கொலை வெறியுடன் அறுத்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்த தேவகி உயிருக்கு போராடினார். அப்போது நடுரோட்டில் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆம்புலன்ஸ் வரவைத்து தேவகியை பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அப்பகுதியில் விசாரித்த போது ஆட்டோவில் வந்த நபர் அந்த பெண்ணை கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து, ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து சின்னாவை தேடி வந்த போலீசார் நண்பர்களுடன் மது அருந்தி இருந்த சின்னாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மனைவி இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பருடன் பழகியதையும், வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் தான் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக சின்னா ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
