செய்திகள்

உதயநிதியிடம் திமுக நிர்வாகி அன்பில் மகேஷ் உதவியாளரை மாற்றக் கோரிக்கை

.

திருச்சி வந்தடைந்த திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, திருச்சி மாவட்ட திமுக ஐடி விங் துணைத் தலைவர் முரளி கிருஷ்ணன், உதயநிதி ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கியபோது, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் உதவியாளர் அருணை மாற்ற வேண்டும் எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, பொது இடத்தில் திமுக நிர்வாகி ஒருவரே முன்னாள் அமைச்சரின் உறவினரும் உதவியாளருமான அருணை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், தெற்கு மாவட்ட திமுக வட்டாரத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button