க்ரைம்

மாதவரம் : பேருந்து நிலையத்தில் பெண்ணின் 20 சவரன் நகை திருட்டு

சென்னை கொடுங்கையூரில் சேர்ந்தவர் லோக்னா. இவர் ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக ஆந்திரா பேருந்து நிலையம் சென்றுள்ளார் . மேலும், அவர் தனது கைப்பையில் 20 சவரன் நகையும் எடுத்து வந்துள்ளார். அப்பொழுது அவர் ஆந்திரா பேருந்து நிலையத்தில் இருந்து சித்தூர் செல்வதற்காக பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, தனது பையை பார்த்த பொழுது கைப்பையில் இருந்த 20 சவரன் நகை காணாமல் போனது லோக்னாக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கோபிநாதிடம் புகார் அளித்துள்ளார். புகார் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் மாதாவரம் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து 20 சவரம் நகையை மீட்டனர். அதேபோல், நகையை திருடி சென்ற நபரையும் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட 20 சவரம் நகை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
  • test
Back to top button