செய்திகள்

அமெரிக்காவில் கத்தியை காட்டி மிரட்டிய பெண் சுட்டுப்பிடிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான டைம்ஸ் சதுக்கத்தில் கத்தியுடன் சென்ற பெண், அங்கிருந்த இரண்டு நபர்களை கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை பிடிக்க முற்பட்டனர். அப்பொழுது அந்த பெண் போலீசாரையும் தாக்க முயன்றது. இதையடுத்து போலீசார் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இந்த தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட அந்தப் பெண்ணின் மனநிலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button