க்ரைம்
Trending

24 மணி நேரமும் ஆழ்துளை கிணறுகள் தோண்டும் இயந்திரங்கள் – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் – அழிவின் விளிம்பில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி

அரசால் தடை செய்யப்பட்ட மலை குடையும் இயந்திரங்களை கொண்டு கொடைக்கானல் கீழ் மலை பகுதியான பண்ணைக்காடு தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வருகிறது.

மலை தொடங்கும் சாலைகளில் வன சோதனைசாவடிகள் உள்ளன . இது போன்ற நடவடிக்கைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் கனிமவளத்துறை , நீர் மேலாண்மை அமைப்புகள் , சுற்றுசூழல் அமைப்பு , மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பு என பல்வேறு கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ள அமைப்புகள் இருந்தும் இது போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்வதால் ஏற்கனவே அழிவின் விளிம்பில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் வெகு விரைவில் வன உயிரினங்களும் மனிதர்களும் வாழ தகுதியற்றதாக மாறிவிடும் நிலைமை ஏற்படும்.

என்றும் உடனடியாக மாவட்ட நிர்வாகமும் சம்மந்தப்பட்ட துறைகளும் நிரந்தர தீர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button