
அமெரிக்காவின் சாட்வொர்த் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் பஸ் ஒன்று விபத்தில் சிக்கியது. இது குறித்து என்பிசி செய்தி நிறுவனம், தங்களுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் சம்பவத்தை நேரலையில் ஒளிபரப்பி வந்தது.
அப்போது, இரு வணிகக் கட்டடங்களுக்கு இடையே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர், பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ஏற்பட்ட தீ, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 4 வாகனங்களுக்கும் பரவி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 70 தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து செய்தி நேரலையில் அப்படியே ஒளிபரப்பானது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.