
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பகுத்தறிவுப் போராளி தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், ஒன்றியம், நகர, பேரூர், கிளை, வார்டு நிர்வாகிகள், மற்றும் கழகத் தோழர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
பின்னர், போராளி தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் விழாவினை சிறப்பித்தனர்.

