செய்திகள்

ஆவடி : உயர் அழுத்த மின்கம்பத்தில் தீ விபத்து

ஆவடி புதிய ராணுவ சாலையில், அரசு மருத்துவமனை எதிரே உள்ள உயரழுத்த மின்கம்பத்தில் மின் கசிவு காரணமாக இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.


அந்த தீ விபத்தில் மின்கம்பத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர்.

இதையடுத்து ஆவடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


மின்கம்பங்களில் விதிகளுக்கு புறம்பாக அதிகளவில் சுற்றப்பட்டுள்ள இன்டர்நெட் மற்றும் டிவி கேபிள்களே இது போன்ற தீ விபத்துகள், மின்தடை மற்றும் மின் பழுதுகளுக்கு காரணமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


மேலும், விதிமீறி பொருத்தப்பட்டுள்ள கேபிள் வயர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button