புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து இவரது மனைவி ராதா இவர்களுக்கு அபிஷேக் அபிரித் ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள் முத்து வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் முத்து நேற்று வேறு ஒரு பெண்ணிடம் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது
இந்நிலையில் மனமுடைந்த ராதா இரண்டு மகன்களுக்கு உணவு கொடுத்து விட்டு படுக்கை அறையில் தூங்க வைத்துவிட்டு ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை பிள்ளைகள் மற்றும் தன் மீது ஊற்றிக்கொண்டு தீயை பற்றவைத்து உள்ளார்
அருகில் இருந்தவர்கள் உடனடியாக கதவை உடைத்து மூன்று பேரையும் மீட்டனர்.
படுகாயமடைந்த ராதா மற்றும் இளைய மகன் அபிரித் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்
படுகாயங்களுடன் மூத்த மகன் அபிஷேக் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அனுப்பி வைக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை அபிஷேக் உயிரிழந்தார் கணவனின் தவறான செயலால் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்திருப்பது அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்