திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பா.விராலிப்பட்டி கிராமத்தில் அரசு இருபாலர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக விராலிப்பட்டி தெப்பத்துப்பட்டி சாலையில் மூன்று ஏக்கர் நிலம் பொதுமக்களால் வாங்கி தரப்பட்டதாக கூறப்படுகிறது கடந்த பத்து ஆண்டுகளாக அந்த இடத்தில் வேறொரு நபர் தனது பூர்வீக இடம் என்று கூறி ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார் இந்நிலையில் அந்த இடம் அரசுக்கு சொந்தமான நிலம் என ஆய்வு செய்யப்பட்டு கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் ஒரு கோடியே 80 லட்சம் நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றது இதனை தொடர்ந்து திட்டப் பணிகள் தொடங்குவதற்கு நிலத்தை சீர் செய்யும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது அதே வேளையில் இட ஆக்கிரமிப்பாளர்கள் ஜேசிபி இயந்திரத்தை இடத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனர் பெண் ஒருவர் ஜேசிபி இயந்திரத்தின் சக்கரத்துக்கு அடியில் படுத்துக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது இதனிடையை அங்கு திரண்ட ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நிலத்துக்குள் சென்று அரசு நிலத்தை அதிரடியாக மீட்டனர் பணியை தடுத்தவர்கள் வெளியேற்றப்பட்டு நிலம் சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது இந்நிலையில் தங்கள் பகுதி பள்ளிக்கு ரூபாய் ஒரு கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கி பள்ளி கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து தந்த தமிழக முதல்வருக்கு கிராம மக்கள் நன்றியை தெரிவித்தனர்
Read Next
செய்திகள்
April 29, 2026
மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழந்தது
விமர்சனங்கள்
April 22, 2026
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
4 weeks ago
ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை – மூட்டை மூட்டையாக மதுபாட்டில்கள் கடத்தல்
4 weeks ago
மனமகிழ் மன்றங்கள் பெயரில் இயங்கிவரும் FL2 மதுக்கூடங்களில் சட்ட விதி மீறல் முறைகேடு – சாட்டையை சுழற்றுமா மாவட்ட நிர்வாகம்
May 7, 2026
மரக்கடத்தல் தொடர்பாக விசாரணை நோட்டிஸ் அனுப்பிய வனத்துறை – வராமல் காலத்தை கடத்தும் மர கடத்தல் கும்பல்
May 7, 2026
பல நூறு கோடி மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தல் – குற்றவாளிகளுக்கு துணை போகும் வனத்துறை அதிகாரிகள்
April 29, 2026
மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழந்தது
April 28, 2026
தொட்டியில் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்
April 23, 2026
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
April 23, 2026
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
April 23, 2026
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
April 22, 2026
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
Related Articles
சிறுவர் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்
May 22, 2024
வன விலங்குகளின் தாகம் தனிக்க களம் இறங்கிய வனத்துறை – கோடை காலம் தொடங்கியதால் துணை இயக்குநர் அருண்குமார் தலைமையில் நீர் நிரப்பும் பணி தொடங்கியது
February 26, 2025
பார்க்கிங் பிரச்சனை – குறிப்பிட்ட சில வண்டிகளுக்கு மட்டும் அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறை அதிகாரி – திருச்செந்தூர்
April 23, 2024
புதிய மின் மாற்றி துவக்க விழா
November 30, 2024
Check Also
Close