காவலாளி மீது தாக்குதல் திமுக நிர்வாகி உட்பட 6 பேர் கைது!!
தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை காவலாளி மீது தாக்குதல் நடத்தியதாக விஜய் ரசிகர் மன்ற தலைவர் உட்பட 6பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடி வருகின்றனர் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுற்றுலா மளிகை உள்ளது. இங்கு ஒரு நபர் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறதுஇங்கு நாசர் மகன் சதாம் உசேன் (29) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 6 அளவில் அங்கு காரில் வந்த தூத்துக்குடி சின்னகடை தெருவைச் சேர்ந்த சேசு மகன் பில்லா ஜெகன் (44) மற்றும் 6பேர் மது அருந்த அறை ஒதுக்குமாறு, காவலாளி சதாம் உசேனிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் அறை தர முடியாது என்று கூறியதால் அவரை அடித்து உதைத்து கல்லால் தாக்கினார்களாம். இதில், காயம் அடைந்த சதாம் உசேன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பில்லா ஜெகன் உட்பட 6பேர் மீது 152, 147, 148, 452, 294 பி, 332, 324, 506(2), 510 ஆகிய பிரிவுகளின் கீழ் தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் பில்லா ஜெகன், அனிதா ராதா கிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை செய்த தெற்கு காவல் நிலைய போலீசார் தூத்துக்குடி மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன் உள்ளிட்ட 6 போ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான இவர்களை தேடி வருகின்றனர்.
செய்திகள் : மாரி ராஜ், தூத்துக்குடி
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தூத்துக்குடி #திமுக #DMK