சினிமா

“நான் பார்த்த முதல் முகம் நீ” வெளியானது வலிமையின் பாடல்

“நான் பார்த்த முதல் முகம் நீ” வெளியானது வலிமையின் பாடல்….

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தல அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில் கடந்த சில மாதங்களாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வீடியோ மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button