சினிமா
Trending

பாகுபலியை மிஞ்சுமா ஆர்.ஆர்.ஆர்?

பாகுபலியை மிஞ்சுமா ஆர்.ஆர்.ஆர்?

பாகுபலிக்கு பிறகு ராஜமௌலியின் பிரம்மாண்ட இயக்கமாக வெளியாக உள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம்.ரணம்.ரௌத்திரம்). 1920 காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை ராஜமவுலி உருவாக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரையும் தனித்தனியாக திரையில் காண்பதற்கே சிறப்பாக இருக்கும். ஆனால் ராஜமௌலி இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து மிக பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளது, திரையுலகில் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைய போகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் ஆர்.ஆர்.ஆர் வெளியாகவுள்ளது.

இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இன்று வெளியாகிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் டிரைலர் சில மணி நேரங்களிலேயே பல லட்சம் காட்சிகளை பெற்றுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்திற்காக பெரும் கூட்டமே காத்திருக்கிறது. அந்த கூட்டத்திற்கு தீனி போடும் வகையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார், ராஜமவுலி.

இத்திரைப்படத்தில் சுதந்திர இந்தியாவுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த இரண்டு நண்பர்களுக்கான போராட்டத்தை பிரமிக்க வைக்கும் வகையில் எடுத்துள்ளார். கடந்த 6 ஆம் தேதி வெளியாக இருந்த படத்தின் டிரைலர், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் பாடலாசிரியரின் திடீர் மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

#RRR #rajamouli #ramsaran #juniorntr #five languages #ஆர்.ஆர்.ஆர் #ராஜமௌலி #ராம்சரண் #ஜூனியர்என்.டி.ஆர் #5மொழிகள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button