செய்திகள்

நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் 27ம் தேதி 8 மாவட்டங்களில் போராட்டம் – நாகை மீனவர்கள்

நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் 27ம் தேதி 8 மாவட்டங்களில் போராட்டம் – நாகை மீனவர்கள்…..

அரசால் தடை செய்யப்பட்ட ஸ்பீடு என்ஜினை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பழையார், திருமுல்லைவாசல், பூம்புகார், சந்திரபாடி மீனவ கிராமங்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி நாகை அக்கரைபேட்டையில் நடைபெற்ற மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க கோரிக்கை. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் 27ம்தேதி 8 மாவட்டத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் அறிவிப்பு:-

நாகை காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அறிவுறுத்தலின்படி விசைப் படகுகளில் இருந்து ஸ்பீடு இன்ஜினை முற்றிலும் இறக்கிவிட்ட நிலையில், அரசால் தடைசெய்யப்பட்ட ஸ்பீட் இன்ஜினை பயன்படுத்தி தொழில் செய்யும் பழையார், திருமுல்லைவாசல், பூம்புகார், சந்திரபாடி ஆகிய கிராமங்களில் உள்ள விசைப்படகுகளில் ஸ்பீடு என்ஜினை வருகிற 24-ஆம் தேதிக்குள் முற்றிலுமாக அகற்ற வலியுறுத்தி அக்கரைபேட்டையில் கடந்த 7ம்தேதி நாகை, காரைக்கால் மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் நகலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மயிலாடுதுறை மாவட்ட தலைமை கிராமம் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் மனுவாக அளித்தனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகிற 27-ஆம் தேதி 8 மாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து, அந்தந்த மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

செய்திகள் : ச.ராஜேஷ், மயிலாடுதுறை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button