கோக்கு மாக்கு
Trending

செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை

திண்டுக்கல், நிலக்கோட்டை(தனி) சட்டமன்றத்தொகுதி உட்பட்ட நிலக்கோட்டை வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் ரூ.10,000 ரூ.2,000 செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.
தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் மாதிரி செக்குகளை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நிலக்கோட்டை, வத்தலகுண்டு பகுதிகளில் வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டனர். டோக்கன் வழங்கியது யார்? எதற்காக டோக்கன் வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

செக் மாதிரியில் இரட்டை இலை சின்னம் போடப்பட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எனவும் செக்கில் பெயர் எழுதும் இடத்தில் தமிழ் குடும்பங்கள் அனைவருக்கும் எனவும் அந்தச் செக்கில் 2/6/26 எனத் தேதியிட்டு ஒரு செக் ரூ.10,000-க்கும், மற்றொரு செக் ரூ.2000-க்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம்தோறும் வழங்கப்படும் என முத்திரை குத்தப்பட்டுள்ளது வங்கியின் பெயர் குறிப்பிடாமல் செக்-ன் பின்பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா எம்ஜிஆர் படங்களுடன் நல்லாட்சினா எடப்பாடி தான் வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கு என அச்சிட்டுள்ளனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button