க்ரைம்

வந்தே மாதரத்தை வைத்து மலிவான அரசியல் செய்கிறது பாஜக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக் தாகூர் குற்றச்சாட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்காகூர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது,

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது இல்லத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளேன் தொடர்ந்து லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற பிரச்சார இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தை விருதுநகரில் தொடங்குகிறோம் மதுரையும் விருதுநகரும் காங்கிரஸ் உடன் நெருங்கிய தொடர்பை தொடர்புடைய மாவட்டங்கள் என்பதால் இந்த பயணம் மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

அரசு விழாக்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை குறித்து கேட்டபோது,

சிறுபான்மை மக்களை துன்புறுத்துவதும் அவர்களது வழிபாட்டு முறைகளில் இடையே ஒரு ஏற்படுத்துவதுமே ஆர் எஸ் எஸ் பாஜகவின் அடிப்படை கொள்கையாக உள்ளது. தேசியம் தேசப்பற்று ஆகியவற்றின் பெயரில் மக்களை அச்சுறுத்தி தங்களது கருத்துக்களை தின்பதே அவர்களது நோக்கமாக உள்ளது.

நேருவும் மகாத்மா காந்தியும் விரும்பிய இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு பல்வேறு மதங்கள் மொழிகள் பண்பாடுகள் கொண்ட மக்கள் ஒற்றுமை உடன் வாழ வேண்டும் வந்தே மாதரம் விடுதலைப் போராட்டத்தில் மக்களை எழுச்சடைய செய்த பாடல் அந்த பாடலையும் தேசிய கீதத்தையும் காங்கிரஸ் எப்போது மதிக்கிறது ஆனால் அதனை வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மலிவான அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது இது குறித்த காங்கிரஸ் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெரிவிப்போம்.

தமிழகத்தில் குதிரை பேரும் நடைபெறுவதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது,

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பணமோ பதவியோ வழங்கி அவர்களை இருப்பதே குதிரை பேரம் அவ்வாறு ஏதும் நடந்திருந்தால் ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் அதை விடுத்து ஆளுநரை சந்தித்து அரசியல் நாடகம் நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல.

தமிழக ஆளுநர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் வை சந்தித்து வந்த பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார் தமிழக ஆளுநர் தன்னிச்சையாக செயல்படாமல் அமித்சாவின் கட்டுப்பாட்டில் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது இது தமிழக மக்கள் நலனுக்கு எதிரானது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2031 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறியது குறித்து கேட்டபோது,

நம்பிக்கையுடன் இருப்பது நல்லது தான் அவருக்கு எனது வாழ்த்துக்கள் 2021 2026 எனக் கூறியவர் தற்போது 2031 என கூறுகிறார் இலக்கு நிர்ணிப்பது முக்கியம். ஆனால் அதில் நிலைத்தன்மை இருக்க வேண்டும் வெறும் தலைப்புச் செய்திக்காக கருத்துக்களை தெரிவிக்க கூடாது.

உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் கட்சி தனித்து போட்டி இட போவதாக வெளியான தகவல் தவறானவை இது குறித்து இடதுசாரி கட்சித் தலைவர்களிடம் பேசிய போது அவ்வாறான செய்திகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவைஎன விளக்கம் அளித்தனர் என இவ்வாறு கூறினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button