செய்திகள்

கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் – திமுகவினர் அமைதி பேரணியாக வருகை

கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் அமைதி பேரணியாக வருகை தந்து கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தூத்துக்குடியில், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சார்பில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணியாக வருகை தந்து கலைஞர் அரங்கம் முன்பாக உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணித்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button