
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் மேற்பார்வையில் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதமன் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது
வத்தலகுண்டு – தேனி சாலை கட்டகாமன்பட்டி அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த ஆண்டிபட்டியை சேர்ந்த சிவச்சந்திரன்(48), பெரியகுளத்தை சேர்ந்த மனோஜ்(36) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்


