
திண்டுக்கல் மாவட்டம்,ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குழந்தை வேலப்பர் கோயில் அருகே தங்கவேல் என்பவர் தோட்டத்தில் சுருக்கு கம்பியை வைத்து கடமான் வேட்டையாடப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து
நிலத்தின் உரிமையாளர் தங்கவேல் மற்றும் சின்னச்சாமி, ராஜா,சரவணன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து மான் கொம்புகள், மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய சுருக்கு கம்பி, செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.