கோக்கு மாக்கு

நெல்லை தொழிலதிபர் வீட்டில் சோதனை மிளும் அரசியல் கட்சி!

நெல்லை
மாவட்டம்நெல்லை
நெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை

நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும் தொழிலதிபர். பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நெல்லை வருமானவரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையில் வந்த அலுவலர்கள் தொழிலதிபர் ஆர் எஸ் முருகன் வணிக நிறுவனத்தில் மாலை 5 மணி வரை ஆய்வு செய்தனர்.

ஒப்பந்த பணிகளைச் செய்யும் போது அதற்கான தொகையில் ஒரு சதவீதம் அட்வான்ஸ் டாக்ஸ் ஆக கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, முன்வரி செலுத்தாத தொகையை கணக்கிட்டு தொழிலதிபரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நெல்லை மாநகர் பகுதியில் அனைவரும் வியக்கும் வகையில் ஆர் எஸ் முருகன் மகனுக்கு பிரம்மாண்டமான திருமண விழா நடந்தது. அதற்காக இருவது கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • ஆந்திராவில் செம்மரக் கடத்தல் – ரூ.10 லட்சம் மதிப்பிலான கட்டைகள் பறிமுதல்

    ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் கார்களை வனத்துறையினர் விரட்டிச் சென்று பிடித்தனர். நீண்ட தூரம் துரத்திச் சென்ற நிலையில், ஒரு காரின் டயர் திடீரென வெடித்ததால், கடத்தல்காரர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். இதையடுத்து, வனத்துறையினர் நடத்திய சோதனையில் 2 கார்களை பறிமுதல் செய்ததுடன், சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய செம்மரக் கடத்தல்காரர்களை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும்,…


  • மத்தியப்பிரதேசத்தில் : கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழப்பு

    மத்தியப் பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் உள்ள பராஜ் கிராமம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 25க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில்…


  • கலிபோர்னியா : சிறிய விமானம் விபத்து – 2 பேர் பலி

    வாஷிங்டன்: அமெரிக்கா கலிபோர்னியாவில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரெஸ்னோ நகருக்கு அருகில் சியரா ஸ்கை பார்க் விமான நிலையம் அருகே சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. விபத்து நடந்த…


Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button