
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனது தந்தை ஹரியுடன் பைக்கில் சென்ற அவரது குழந்தைகளான கதிர்வேல், சஞ்சய் ஆகியோர் எதிர்பாராதவிதமாக பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த லாரி குழந்தைகள் மீது ஏறியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.