
அஸ்ஸாம் மாநிலம் கோலாகட் மாவட்டம் மொராங்கி வனப்பகுதியில், கழுத்தில் டிராக்டர் டயர் சிக்கிய நிலையில் யானை ஒன்று உலா வந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் யானையின் கழுத்தில் சிக்கியிருந்த டயரை பாதுகாப்பாக அகற்றினர். இதை தொடர்ந்து, டயர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.


