
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் உள்ள ஓட்டல்களில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல், நேரடியாக பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய்களில் விடப்படுவதால் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சாலைகளில் கழிவுநீர் தேங்கி, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி தர்மராஜா கோவில் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாததால், பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.2,000 அபராதம் விதித்தனர். மேலும், திடக்கழிவுகளை முறையாக அகற்றாமல் பாதாள சாக்கடையில் விடக்கூடாது என அறிவுறுத்தினர்.




