செய்திகள்

அக்.,2 முதல் வெற்றி பயண திட்டம் துவக்கம்

சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் வெற்றிப் பயணம் திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அக்டோபர் 2ம் தேதி முதலமைச்சரால் வெற்றிப் பயணம் திட்டம் துவங்கி வைக்கப்பட உள்ளது. போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்தம் 18,413 பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69%) இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் தினமும் 84.32 லட்சம் பெண் பயணிகள் பயனடைவார்கள்; இதையடுத்து, மாநிலம் முழுவதும் தமிழக மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும்.

மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியச் சேவைகளுக்கு கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button