
இந்திய குடியுரிமை பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கே முன்பே, வாக்காளர் பெயர் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் பெயர் சேர்க்கப்பட்டு விட்டதாக புகார் எழுந்தது.
இது குறித்து பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, ஆவணங்களை சோனியா போலியாகத் தயாரித்ததற்கான தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், டில்லி புலனாய்வு அதிகாரிகளுக்குப் போதுமான அவகாசம் வழங்காமல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி, சோனியாவுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்காக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கே மாற்றி உத்தரவிட்டதுடன், வரும் 29ம் தேதி புதிய விசாரணைக்கு பட்டியலிட்டு ஆணையிடப்பட்டுள்ளது.

