செய்திகள்

திமுக எம்.பி சி.என். அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. சி.என். அண்ணாதுரைக்கு நெருக்கமான இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாதுரைக்கு சொந்தமான லாரி சர்வீஸ் நிறுவனம், தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button