செய்திகள்

ஆம்னி பேருந்து கார் மோதி விபத்து – 4 பேர் பலி

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே, ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் கார் மோதிய விபத்தில் சென்னையில் வசித்து வந்த கார்த்திக், அவரது மனைவி சூர்யா உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 7 பேர் காரில் சென்னைக்கு திரும்பியபோது, அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கண்ணதாசன், ஜான்கென்னடி, சரண்யா ஆகிய 3 பேர் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆம்னி பேருந்து ஓட்டுநர் ராஜசீலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button