கோக்கு மாக்கு

நாட்றம்பள்ளி அருகே நீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பிற்கு கழிப்பிட வசதி இல்லாதது தான் காரணம் என பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட நாயுணசெரு கிராமத்தில். கடந்த சில வாரங்களுக்கு முன்பு

அதே பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி திருப்பதி மகள் ஜனனி வயது (6) அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகள் ரேக்கா வயது (9)

இரண்டு சிறுமிகளும் இயற்கை உபாதை கழிப்பதற்கு அருகே உள்ள ஏரிக்கு சென்று இரண்டு சிறுமிகளும் எதிர்பாராதவிதமாக ஏரியில்மூழ்கி உயிரிழந்தனர்.

அப்பகுதி மக்கள் சடலத்தை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தி எங்களுடைய குழந்தைகள் இறப்பதற்கு காரணம் ஏரியில் தூர் வாரும் பணியின்போது சரிவர செய்யாமல் ஒரு பகுதி மேடாகவும் ஒரு பகுதி தாழ்வாகவும் குழி எடுத்து விட்டு சென்று உள்ளதால் அப்பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி தேங்கி உள்ளதால் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பிர்க்கு காரணம் ஆகிவிட்டது அதற்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மெத்தன போக்கு தான் காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

பெற்றோர்கள் குற்றச்சாட்டு

எங்கள் பகுதிக்கு கழிவறைகள் இல்லாததால் நாங்கள் திறந்த வெளியில் கழிப்பிடம் கழிப்பதற்கு ஏரிக்கு செல்வது வழக்கம். ஆனால் எங்கள் பகுதிக்கு கழிப்பிட வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button