சர்ச்சையை ஏற்படுத்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சுவரொட்டி!!! எச்.ராஜா எச்சரிக்கை!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், “தீமையை தரும் பட்டாசை தவிர்ப்போம். உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள். நன்மையை செய்யுங்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் உடன்பிறப்புகளாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
யாருடைய கரங்களில் இருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே சிறந்த முஸ்லிமாக இருப்பார். மனித இனத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைக்கும் பட்டாசை தவிர்ப்போம். என்றும் மக்கள் சமுதாயப் பணியில்” என்று பதிவிடப்பட்டுள்ளது. தீப ஒளிப்பண்டிகையை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள் என்ற காரணத்திற்காக, சுற்றுசூழலை பாதுகாப்புக்கு அழைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அருப்புக்கோட்டை பிரிவு சர்ச்சை சுவரொட்டி பதிவு செய்துள்ளது.
எச்.ராஜாவின் ட்விட்டர் கண்டன பதிவில், “முஸ்லிம் மதவெறி அமைப்பு இந்துக்களின் பண்டிகை,பழக்க வழக்கங்களில் தலையிட்டால் அதேபோல் இவர்கள் பண்டிகைகள் குறித்தும் இந்துக்கள் கருத்துக்கூற வேண்டிவரும். இஸ்லாமிய மதவெறியர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவர்களுக்கு நல்லது” என்று தெரிவித்துள்ளார்.
இந்துக்களே தீபஒளி பண்டிகையை பட்டாசு வெடித்து சிறப்பிக்கிறார்கள் என்று தெரிந்து, அவர்களை பட்டாசு வாங்கி வீண் விரயம் செய்பவர் சைத்தான் என்றும் பதிவு செய்துள்ளது என பலரும் சுவரொட்டிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தீபாவளி #பட்டாசு #தவ்ஹீத்_ஜமாஅத்_அமைப்பு #எச்.ராஜா #H.Raja #Diwali #TNTJ