கள்ளசாராயம் விற்பனை பலியான மக்கள் காவல்துறை அதிகாரி சஸ்பென்ட் இப்படி நகர்கிறது
அரசு எந்திரம்
பாவம் ஒருபக்கம் பலி ஒரு பக்கம் என க்ளைமாக்ஸ்
மாவட்ட எஸ்பி சஸ்பென்ட்
நல்லா இருக்கு உங்க ஞாயம்..
மாவட்டத்தில் கள்ள சாராயம் விற்பனையாகிறது
உளவுத்துறையின் செயல்பாடுகள் என்ன ஆச்சு..?
எஸ்பி கான்ஸ்டபிள்
எஸ்பி சிஐடி
ஓசிஐயூ
இவர்கள் அந்த மாவட்டத்தில் இல்லையா..?
மாவட்ட யூனிட்டில் இருப்பவர்கள் 8ஆண்டுகளுக்குமேல் இருக்க கூடாது இது விதி ஆனால் சில மாவட்டங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேலாகவும் இருந்து வருகிறார்கள் இது எப்படி சாத்தியமாகிறது..?
நெல்லை பல்வீர் சிங் விவகாரத்தில் மாவட்ட எஸ்பியை மாற்றம் செய்தார்கள் அவர் என்ன செய்தார். அவரது ரோல் என்ன..?
தென்மன்டல காவல்துறைக்கு மாவட்ட அளவிலான பதவிகளுக்கு யாரும் வர விரும்பவில்லை விரும்பவும் மாட்டார்கள் அப்படி ஒரு நிலைதான் தென் மாவட்டம் இருக்கிறது
டிஎஸ்பிக்கள் ஆய்வாளர்கள் என பணிபுரிய தயங்குகிறார்கள்
மாவட்ட எஸ்பிக்களுக்கே இந்த நிலை என்றால் நமக்கு என்ன ஆகுமோ என அஞ்சுகின்றனர்
சில மாவட்டங்களில் உள்ள தனிபிரிவு காவலர்கள் ஆய்வாளர்களை அச்சுறுத்தியே வைத்திருக்கின்றனர் என்கிற தகவலும் உண்டு
ஜாதிரீதியான கொலைகளை உடனடியாக fastTrack விரைவு நீதிமன்றம் மூலமாக விசாரனைக்கு உட்படுத்தி தண்டனை பெற்றுந்த்தால் ஜாதி ரீதியான கொலைகள் தடுக்கபடலாம்
உளவுத்துறையினரின் மெத்தனபோக்கே இது போன்ற குற்றங்களுக்கு காரணம் என விபரம் அறிந்தவர்களின் குற்றசாட்டு
எஸ்பிக்களை மாற்றுவதை விட்டு விட்டு எஸ்பி ஏட்டுக்களை மாற்றுங்கள் நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்கட்டும்
விசில் சிறப்பு செய்தி